தேர்தல் நடத்தை விதிமீறல் ரூ.7.80 லட்சம் பறிமுதல்
திருவள்ளூர்: திரு வள்ளூர் அடுத்த மணவாளநகரைச் சேர்ந்த சித்ரா, 35, என்பவர் நேற்று காலை 'ஸ்கூட்டரில்' சென்று கொண்டிருந்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 3 லட்சம் ரூபாயை, தே ர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், காட்டு கூட்டு பகுதியில் 'ஹூண்டாய் அஸ்டா' காரில் வந்த மப்பேடைச் சேர்ந்த அருண், 40, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த 4.75 லட்சம் ரூபாயை, திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருமழிசை குண்டுமேடு பகுதியில் வந்த 'டாடா நெக்ஸான்' காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த சென்னை உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 38 என்பவர் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 3.05 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பூந்தமல்லி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா