பூட்டிய வீட்டில் 3 சவரன் திருட்டு
கடம்பத்துார்: கடம்பத்துார் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் இளம்பாரதி, 55; பெயின்டர். இவருக்கு, பவானி, 53 என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பாரதி, கடந்த 16ம் தேதி மனைவியுடன் சென்று, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பவானியின் பெற்றோர் வீட்டில் இவரது மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பவானி வீட்டிற்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
Advertisement
Advertisement