நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்தவர் பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் சென்ற வாலிபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்தவர் மணிகண்டன், 22. கடந்த 12ம் தேதி, ஆரம்பாக்கத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். எளாவூர் சோதனைச்சாவடி அருகே, சாலையில் நாய் குறுக்கிட்டதால், தடுமாறி கீழே விழுந்தார்.
பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
Advertisement
Advertisement