பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி உத்திர கொடியேற்றம்
திருவள்ளூர்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நரம்பு சம்பந்தமான நோய்க்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
நடப்பாண்டு பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, நாளை காலை 9:00 - 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று காலை 10:30 - 12.00 மணிக்குள் விக்னேஷ்வர பூஜையும், கணபதி ஹோமமும், மகா தீபாராதனையும், நவகலச அபிஷேகமும் நடைபெறும்.
இந்த விழா, வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் காலை - மாலை இரு வேளைகளிலும் சோளீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி வீதியுலா 26ம் தேதியும், தேர்த் திருவிழா, 28ம் தேதியும், திருக்கல்யாணம், 29ம் தேதியும், நடராஜர் உத்சவம் 30ம் தேதியும் நடராஜர் வள்ளுவன் காட்சி மற்றும் நடராஜ பெருமான் வீதியுலா 31ம் தேதியும் நடைபெறும். வரும் 31ம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும் என, ஹிந்து அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா