'கள்'ளுக்கு அனுமதி கேட்டு வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
மதுரை: தமிழகத்தில், கள் இறக்க, விற்க அனுமதிக்க கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
துாத்துக்குடி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி, ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலானது. அதன் விசாரணையின் போது, 'கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே, கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை விட, கள்ளில் குறைவாகவே போதை உள்ளது.
எனவே, மதுவிலக்கு சட்டத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும். தனி மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக உள்துறை செயலர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் என்.சதீஷ் குமார், எம்.ஜோதிராமன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
2020ல் வழக்கு தொடரப்பட்ட போதிலும், தற்போது வரை தமிழக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஏப்., 27க்குள் அரசு தன் பதிலை தாக்கல் செய்ய தவறினால், அடுத்த விசாரணையின் போது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு எச்சரித்து, அன்றைய தினத்திற்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
கள்ளுக்கு அனுமதியளித்தால் 10ரூ மூலம் வரும் பத்தாயிரம் கோடி வருமானம் போய்விடும் என்ற பயம் அதிகார வர்கத்திற்கு திருடர்கள் ஒழிந்து விடுவார்கள்
இப்புடியே இழுத்து கொண்டே போவார்கள்
2020ல் போட்ட வழக்குக்கு ஆட்சி முடியும் நேரத்துல இதென்ன கண்டிஷன். சட்டுபுட்டுன்னு வழக்கை முடித்து கேரளா போல கள் விற்க அனுமதி வழங்கனும்.
போதைக்காக வேதிப்பொருட்களை கரைக்கு விற்று விடுவார்கள் அதனால் உடல்நலக் கேடு ஏற்படும் என்று அரசாங்கம் கூறுவது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது ஏனென்றால் ஒருவன் தப்பு செய்தால் அவளை அதை கண்காணிப்பதும் அவனுக்கு தண்டனை கொடுப்பதும் அரசாங்கத்தின் வேலை ஒரு செயலை செய்வதற்கு முன்னாடியே அவர்கள் இவ்வாறு தப்பு செய்வார்கள் என்று சொல்லி அரசு சொல்வது அரசின் இயலாமை என்று சொல்வதை விட வேறு நோக்கம் நமக்கு நன்றாக தெரிகிறது மத்திய அரசு இவ்வாறு கூறும் அரசினை பிஸ்மிஸ் செய்து அவர்கள் இந்த மாநிலத்தை ஆள தகுதியற்றவர்கள் என்று கூறி அரசை கலைத்து விட வேண்டும்
Great. Six long years gone. No action.
காற்றில் கலப்படம் இல்லாமல் இருந்தால் நல்லது. மேலும் நிபா வைரஸ் வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம் ஏனெனில் வவ்வால்கள் கல்லில் வாய் வைக்கும்
கள்ளு என்பது போதை தருவது என்பதால் அதனை தடை செய்யவில்லை. அது ஒரு விவசாயம் சார்ந்த தொழில். மேலை நாடுகளின் பார்வையில், கடந்த நாற்பது ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவின் விவசாய சார்பின்மை என்பது அழிக்கப்பட வேண்டிய ஒரு முறை. அதற்கு பனை வளர்ப்பு தடையாய் இருந்தது. இந்திய விவசாயம் தொழில் முன்னேற்றம் என்கின்ற போர்வையில் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பனை வைத்திருப்பவன் பனங்காட்டினால் சுயசார்பு எட்டுவதில்லை. அதனுடன் செய்யும் உப தொழில், ஆடு, கோழி வளர்த்தல் போன்றவற்றால் குடும்ப சுயசார்பு எட்டியிருந்தான். அதுவும் அழிக்கப்பட்டது. பணம் கொழுத்தவர்களுக்கு தங்கள் நிலத்தினை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான்.
கேவல சாராயம் மாதிரி கள்ளும் கேவலமான போதை வஸ்து தான் அரசு இதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த முடியாதா?
மக்கள் கருத்து கேட்பது அரசு வேலை அதை நீதிபதி எப்படி கேட்பார்
ஐந்து வருடம் கூட தாமதிக்க வில்லை ஆளுநர் ரவி அவரின் தாமதத்தால் எப்படி உச்ச நீதி மன்றம் அந்த சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது... அதே போல இதுக்கும் அதாவது தமிழக கேடுகெட்ட மாடல் அரசின் தாமதத்தால் இதையும் அமல் படுத்தி விடலாமே...மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா