விவசாயி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விவசாயி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த குமளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 59; விவசாயி. இவர், கடந்த 16ம் தேதி வீட்டிலிருந்து நிலத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement