சென்னை கிளப் டென்னிஸ் இந்திரா நகர் கிளப் சாம்பியன்
சென்னை: சென்னையில் நடந்த கிளப் டென்னிஸ் இறுதிப் போட்டியில், இந்திரா நகர் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையேயான, '33வது சன்மார் டி.என்.டி.ஏ., சென்னை சிட்டி கிளப் லீக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 26' தொடர், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்தது.
இதில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான 'சி' பிரிவு லீக் இறுதி போட்டியில் இந்திரா நகர் அணி மற்றும் ரன்சா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முன்னேறின.
போட்டியின் முதல் ஆட்டத்தில் ரன்சா அணியின் அமரோஸ் பிரதீப் - வெங்கட் கவுசிக் ஜோடி, இந்திரா நகர் அணியின் மாதவன் ராம நரசல்யன், ரகுநாத் ஜோடியை நேர் செட் கணக்கில் தோற்கடித்து முன்னிலை பெற்றது.
மற்றொரு போட்டியில், இந்திரா நகர் அணியின் கார்த்திக் சேஷாத்ரி - ரகு ராமாராவ் ஜோடி தன்னம்பிக்கையுடன் விளையாடி, ரன்சா அணியின் தமிழ்செல்வன் - அரவிந்த் ராஜகோபாலன் ஜோடியை நேர் செட்டில் வீழ்த்தினர்.
இதனால் போட்டி, 1 - 1 என்ற சமநிலையை எட்டியது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்தில் இந்திரா நகர் அணியின் நடகுமார் நடராஜன், தியாகராஜன் வெங்கடராமன் ஜோடி, அனுபவத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தி, ரன்சா அணியின் சரந்த் பிரசன்னா, ஸ்ரீ கிருஷ்ணன் ஜோடியை 6 - 2, 6 - 2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றது.
அடையாறு அருகே, இந்திரா நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்திரா நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2 - 1 என்ற கணக்கில், ரன்சா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா