கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்பு அரவை

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டில் 1.98 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.

திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி மூலம் கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.

தினமும் 1,800 - 2,100 டன் கரும்பு அரவை செய்யப்படும். 2,501 விவசாயிகளிடம் இருந்து, 7,505 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 2 லட்சம் டன் கரும்புகள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 2 லட்சம் டன் கரும்பை அரவை செய்யும் பணி, கடந்தாண்டு அக்., 25ம் தேதி துவங்கியது.

கடந்த 17ம் தேதி அரவை முடிந்தது. இதில் 1.98 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.

@block_B@ ஐந்து ஆண்டுகளாக கரும்பு அரவை விபரம் ஆண்டு இலக்கு அரவை 2020 ---- 21 1.75 1.30 2021 --- 22 1.75 1.80 2022-- - 23- 2.25 2.26 2023 - --24- 2.50 1.96 2024 - --25- 2.00 1.55 2025 ---- 26 -- 2.00-- 1.98block_B

Advertisement