சமையல் மணக்க டிப்ஸ்
கருவாடு குழம்பு செய்யும் போது, கடைசியாக மூன்று பல் பூண்டு தட்டி போட்டால் குழம்பு மணமாக இருக்கும்.
l தோசைக்கு மாவு அரைக்கும் போது, அதனுடன் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், தோசை பஞ்சு போன்று மென்மையாக வரும்.
l நல்லெண்ணெய் பாட்டிலில், கொஞ்சம் வெல்ல உருண்டை போட்டால் சிக்கு வாடை வராது.
l இனிப்புகளுக்கு ஏலக்காயுடன் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு கிராம்பு, சிறிதளவு ஜாதிக்காய் சேர்த்து பொடி செய்து பயன்படுத்தினால், வாசனையாக இருக்கும்; சுவையும் கூடும்.
l கொத்துமல்லி இலையில் துவையல் செய்யும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும்.
l குலோப் ஜாமூன் மிக்சில் உப்பு, காரம், பன்னீர் சேர்த்து பிசைந்து பொரித்து எடுத்து, கிரேவியில் சேர்த்தால் பன்னீர் கப்தா ரெடி.
l கட்லெட் செய்யும் போது பிரட் துாள் தீர்ந்து விட்டால், சிறிது ரவையில் புரட்டி எடுக்கலாம்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா