நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் இன்று மகளிர் தினம்

பெங்களூரு: நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில், இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெ ங்களூரு பசவனகுடி பி.பி.வாடியா சாலையில் உள்ள, இந்திய உலக பண்பாட்டு நிறுவனத்தில், நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில், சர்வதேச மகளிர் தினம் இன்று காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கொண்டாடப்படுகிறது.

கல்வியாளர் மற்றும் கதை சொல்லுதலில் விருது பெற்றவரும், ஸ்டோரி டிரையாங்கிள் நிறுவன நிறுவனருமான அபர்ணா அத்ரேயா, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பேராசிரியரும், புவி அறிவியலாளருமான குசாலா ராஜேந்திரன், பாகவத மேளா வித்யாலயா இயக்குநர் பிரியம்வதா முரளி, விண்வெளி பொறியாளரும், ஜெனக்ஸ் ஸ்பேஸ் நிறுவன இணை நிறுவனருமான நிகிதா ஆகியோருக்கு, 'நந்த தீபம்' விருது வழங்கப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு: 91487 65970

Advertisement