விஜய் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு உதவும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்

25

சென்னை: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கும் த.வெ.க.,வுக்கு, தமிழகம் முழுதும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் உதவி செய்கின்றன.


இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:மக்களிடம் செல்வாக்கு உள்ள நேர்மையான மற்றும் திறமையான நபர்களை, வேட்பாளர்களாக அறிவிக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அதில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, விஜய் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், நேர்காணல் நடத்தி வருகின்றனர்.


இருப்பினும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே அதிருப்தி ஏற்படாமல் இருக்கவும், மக்களின் ஆதரவு முழுதுமாக இருக்கும் வகையிலும், வேட்பாளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். இதற்காக அவருக்கு, கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் உதவுகின்றன.


முன்னணி கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு, மக்களுடன் நேரடி தொடர்பு உள்ளது. அவர்கள் வாயிலாக, தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வழங்கியவர்களில், ஒரு தொகுதிக்கு தலா, 10 பேர் என, தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் குடும்ப பின்னணி, கல்வி நிலை, அரசியல் பின்னணி, மக்கள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


அவற்றின் அடிப்படையில் தொகுதிக்கு மூன்று பேரை தேர்வு செய்து, விஜய்க்கு, கல்வி நிறுவனங்கள் பரிந்துரை செய்ய உள்ளன. அதில் ஒருவரை வேட்பாளராக, விஜய் தேர்வு செய்ய உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement