100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: காஞ்சியில் முக்கிய வீதிகளில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்., 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு, தேர்தல் ஆணையமும் , காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர், மகளிர் குழுவினர் பங்கேற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்தி, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகளை மட்டுமல்லாது, வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதேபோல், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கோலமிட்டு, 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு நடந்தது.
திட்ட அலுவலர் இந்திரா தலைமையில் நடந்த இந்நிகழ்வில், அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று 'ஓட்டளிப்பது நம் கடமை; எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' போன்ற வாசகங்கள் எழுதி உறுதிமொழி ஏற்றனர்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா