தேர்தல் விதிமீறல்; தினமும் 10 புகார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை 90க்கும் மேற்பட்ட பறக்கும்படை, வீடியோ, நிலையான கண்காணிப்புக்குழு உட்பட பல குழுக்கள் கண்காணித்து வருகின்றன.

கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடம் புகார் பெற்று வருகின்றனர். இதற்கென இலவச போன் எண் 1800 425 4268 ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர 0452- 2530 115 முதல் 119 வரையான எண்களும் உள்ளன.

இப்பிரிவுக்கு தினமும் 10 புகார்கள் வருகின்றன. பெரும்பாலும் சுவர் விளம்பரம் அழிக்கப்படாதது, வாகன அனுமதி கேட்டு, தேர்தல் விதிமீறல் போன்ற புகார்களே அதிகம். அவை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வருவாய் அலுவலர்கள் கூறுகையில், ''அரசியல் கட்சிகள் பிரசாரம் துவங்கிய பிறகு அதிக புகார்கள் வர வாய்ப்புள்ளது'' என்றனர்.

Advertisement