கிணத்துக்கடவு யாருக்கு பா.ஜ. கட்சியினர் எதிர்பார்ப்பு

போத்தனூர்: கோவை, அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் பா.ஜ.விற்கான தொகுதிகள் இன்று இறுதி செய்யப்படவுள்ளன.

இதில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் இரண்டை தேர்வு செய்ய, பா.ஜ.விற்கு அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிணத்துக்கடவு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் களமிறங்க எம்.எல்.ஏ. தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.சண்முகம், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் தயாராக உள்ளனர். அதே வேளையில், தொகுதியை பா.ஜ.வுக்கு ஒதுக்க வேண்டுமென பா.ஜ.வினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement