தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க.வில் யாருக்கு வாய்ப்பு?
கோவை: தொண்டாமுத்துார் தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 16 பேரிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
தொண்டாமுத்துார் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அண்ணா அறிவாலயத்தில்நேர்காணல் நடந்தது. கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணலில், விருப்ப மனு கொடுத்தவர்கள் அழைக்கப்பட்டனர்.
இதில், விருப்ப மனு கொடுத்த, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி, தி.மு.க. சட்டத்துறை மாநில இணை செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, அரசு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி உட்பட 16 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்றனர்.
அப்போது, தொண்டாமுத்துாரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார்.
மகளிருக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றி இருப்பதால் இந்த முறை தொண்டாமுத்துார் தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உடனே ஸ்டாலின், 'இப்போது ஒற்றுமை இல்லையா' என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த சிலர், 'ஒற்றுமையாக தான் இருக்கிறோம்; அனைவரையும் அரவணைத்து சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என்ற அர்த்தத்தில் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பா.ஜ. போட்டியிடும் தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று அருள்மொழி கோரிக்கை வைத்தார்.
தி.மு.க. கூட்டணியில், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், நானே (ஸ்டாலின்) போட் டியிடுவதாக நினைத்து, வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா