ஓடும் காரில் திடீர் தீ

கோவை: கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவெங்கடபதி. இவரது காரை நீலாம்பூரை சேர்ந்த சன்ஜித் என்பவர் அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் ஓட்டிச்சென்ற போது, காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது.

டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி இறங்கினார். கார் முழுவதும் தீ பரவியது பீளமேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement