கலவையில் கலக்கும் ஈரமணலால் ஆபத்து சகதி துண்டுகளால் பலம் இழக்கும் வாய்ப்பு
ஒ ரு வீட்டை கட்ட பலவிதமான பொருட்கள் தேவைப்படுவதால் கனவு இல்ல உரிமையாளர்களுக்கு குழப்பம், தயக்கம் ஏற்படுவது இயல்பே. கிடைக்கும் பொருட்களில் எதை பயன்படுத்துவது, எது சரியானது என்று தேர்ந்தெடுப்பது என சந்தேகம் ஏற்படலாம்.
கட்டுமானத்துக்கு நல்ல சுத்தமான மணலை தேர்ந்தெடுப்பது முக்கியம். கான்கிரீட்டை தயார் செய்யும்போது இடைவெளிகளை நிரப்ப ஓர் நல்ல கலவை பொருளாக மணல் இருக்கிறது. எனவே, மணலில் தண்ணீர் கலந்திருக்கவோ அல்லது ஈரமாகவோ இருக்கக்கூடாது.
கான்கிரீட் அல்லது கலவை தயாரிக்கும்போது ஈரமான மண்ணை பயன்படுத்தினால் சிறிதளவு மண்ணை கூடுதலாக சேர்ப்பது அவசியம். உதாரணமாக, மணலில் 5 சதவீதம் தண்ணீர் கலந்திருந்தால் நீங்கள் அந்த ஈரமணலுடன் கூடுதலாக 25 சதவீதம் மணல் சேர்க்க வேண்டும்.
மணலை பரிசோதித்து வாங்குவது நல்லது. ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து உள்ளங்கையில் அழுத்துங்கள். அதில் சகதி, அழுக்கு அல்லது இதர அசுத்தம் இருந்தால் உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ளும்.
மணலில் களிமண் கட்டிகள், துாசு துரும்புகள், கூழாங்கற்கள், சரடுகள் இருந்தால் பயன்படுத்தக்கூடாது. சகதி துண்டுகள் கேடு செய்பவை. அவற்றை சல்லடை வாயிலாக தனியாக பிரிக்க வேண்டும். மற்றொரு முறையும் உள்ளது.
ஒரு டம்ளரில் பாதியளவு மண்ணை நிரப்பி, அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு ஸ்பூனில் கலக்கினால் தண்ணீர் கலங்கலாக மாறும். மணலின் அளவைவிட சேற்றின் அளவு 4 சதவீதம் தடிமனாக இருந்தால் பயன்படுத்தும் முன்பு மணலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
மணலை நுண்ணிய சல்லடையால் சலிப்பதால் சகதி கட்டிகள், பொடி சிப்பிகள் தனியாக பிரிக்கப்பட்டுவிடும். கட்டுமான பணியாளர்கள் பொதுவாக கலவைகளில் அதிக தண்ணீர் சேர்ப்பது வழக்கம்.
பயன்படுத்தப்பட்ட மணல் ஏற்கனவே ஈரமாக இருந்தால், அதில் மேலும் தண்ணீர் சேர்க்கும்போது பலம் இழந்துவிடும். எனவே, சைட்டில் நடக்கும் பணிகளையும் கண்காணித்து பொறியாளர்கள் வேலை வாங்குவது அவசியம் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
மேலும்
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது