அரசியல்வாதிகள் கார்களை கண்டு கொள்ளாத தேர்தல் பறக்கும் படை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் கட்சி கொடிகளுடன் சுற்றும் அரசியல்வாதிகளின் கார்களை பறக்கும் படை யினர் கண்டுகொள்ளாமல், விற்பனை பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களை பிடிப்பதால் தொழில்துறையினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 3 பறக்கும் படை குழுவினர் இரவு, பகலாக ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வத்திராயிருப்பில் விவசாய கூலி தொழி லாளர்களுக்கு சம்பள பணம் கொண்டு போன வரிடமும், சுப நிகழ்ச்சிக்கு ஜவுளி எடுக்க டூ வீலரில் சென்றவரிடமும் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஆனால் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சர்வ சாதாரணமாக கார்களில் கட்சி கொடிகளுடன் சுற்றி வருகின்றனர். இவர்களை பறக்கும்படையினர் கண்டு கொள்வதில்லை.
அதே நேரம் தொழில் நிறுவனங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் சோதனை செய்வதால் தொழில் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்