மந்தகதியில் நடக்கும் கிழவனேரி ரோடு பணி

காரியாபட்டி: கிழவனேரி வல்லப்பன்பட்டி ரோடு மந்த கதியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி கிழவனேரியிலிருந்து வல்லப்பன்பட்டி வரை 3 கி. மீ., தூரம் ரோடு படு மோசமாக இருந்தது. இந்த தூரத்தை கடக்க 45 நிமிடங்கள் ஆகின்றன.

இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடந்தது. கண்மாய் கரையில் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. அதற்குப் பின் ரோட்டை பெயர்த்து போட்டு ரோலர் விட்டு நசுக்கினர். தற்போது மேடும், பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாளப்பேரி, ஸ்ரீராம்பூர் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நேரம், எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. பல மாதங்களாக ரோடு போடும் பணி மந்த கதியில் நடைபெறுவதால் சிரமம் ஏற்படுகிறது. ஆத்திர அவசரத்திற்கு சென்று வர முடியவில்லை. விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement