மாநில கூடைப்பந்து போட்டி
சிவகாசி: சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணா மலை அம்மாள் மாந கராட்சி பள்ளியில் வாரியர்ஸ் விளையாட்டு கழகம், சிவகாசி டவுன் ரோட்டரி கிளப் சார்பில் ஆண்களுக்கான மாநில கூடைப்பந்து போட்டி நடந்தது.
வாரியர்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள் மகேந்திர பாண்டியன், ரகுபதி . வெங்கடேஷ் குமார், சிவசங்கர் தலைமை வகித்தனர். மேயர் சங்கீதா துவக்கி வைத்தார்.
சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்துார், தேனி, சிவகாசி தென்காசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றது. கமிஷனர் சரவணன் தொழிலதிபர்கள், ராஜேஷ், விக்ரம் ராஜாக்கனி ரோட்டரி கிளப் உதவி ஆளுநர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 25 ஆயிரம், 2 ம் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை, ரூ. 20 ஆயிரம், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை, ரூபாய் 15 ஆயிரம், நான்காம் அணிக்கு கோப்பை ரூ. 10 ஆயிரம். வழங்கப்படும்.
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா