மூன்று இடங்களில் தடுப்பு அணைகள்

தேனி: மாவட்டத்தில் 3 இடங்களில் வண்டல் மண் தடுப்பு நிலையங்கள் அமைக்கும் பணி துவங்கி உள்ளதாக வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: ஆற்றில் வண்டல் மண் அதிக அளவில் அடித்து செல்வதை தவிர்க்க சிற்றாறுகள், ஓடைகளில் வண்டல் தடுப்பிற்காக சிறிய தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.

இதற்காக சோதனை முறையில் வைகை ஆற்றில் முத்தலாம்பாறை, சிங்கராஜபுரம், போடியில் என 3 இடங்களில் ரூ.34 லட்சம் மதிப்பில் 3 வண்டல் மண் தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.

இவற்றில் படியும் வண்டல் மண் 3 முதல் 6 மாதங்களுக்கு கணக் கிடப்படும்.

அதன் அடிப்படையில் அப்பகுதிகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகளில் வண்டல் மண் தடுப்பணைகள் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும். மூன்று வண்டல் தடுப்பணைகள் அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது என்றனர்.

Advertisement