தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
நமது நிருபர்
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ். அதனால் அவர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பரமக்குடியில் காலை நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பரமக்குடி தொகுதி எமனேஸ்வரம் நெசவாளர்களிடம் குறை கேட்டார். பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தேர்தல் பிரசாரம் எப்படி இருந்தது நீங்கள் பார்த்தீர்களா? மீடியா நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் மிகைப்படுத்தி தான் சொல்லுவேன். நீங்கள் தான் விமர்சனம் செய்து எழுதுகிறவர்கள்.
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ். அதனால் அவர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கிறார். நடைபயிற்சி நான் வழக்கமாக மேற்கொள்வது தான். தேர்தல் நேரம் என்பதால் மக்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். அதிமுகவின் முகமூடியை போட்டு கொண்டு தான் பாஜ தமிழகத்திற்குள் உள்ளே வருகிறது. அதுதான் உண்மை. அரசு அதிகாரிகள் மாற்றம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கேள்வியும், பதிலும்!
கேள்வி: ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். தியேட்டரில் வெளியாகுவதற்கு முன்பே ஆன்லைனில் வெளியாகி விட்டதே?
முதல்வர் ஸ்டாலின்: அதை பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: படம் வெளியானதற்கு துணை முதல்வர் உதயநிதி காரணம் என்று ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின்: அப்படியா, அது தெரியவில்லை. ஆதவ் அர்ஜூனா நியூஸ் எல்லாம் நான் படிக்கிறது இல்லை.
கேள்வி: திமுக- தவெக இடையே தான் போட்டியே என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்?
முதல்வர் ஸ்டாலின்: நான் அது பற்றி எல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை, நோ கமென்ட்ஸ்
வாசகர் கருத்து (52)
Barakat Ali - Medan,இந்தியா
12 ஏப்,2026 - 21:12 Report Abuse
நீங்க பேசுற பேச்சையெல்லாம் கவனிச்சா ரெண்டு பேருமே விரக்தியில் இருக்குறமாதிரி தோணுது ...... 0
0
Reply
Chandru - ,இந்தியா
12 ஏப்,2026 - 17:04 Report Abuse
துண்டு சீட்டு இல்லாமல் எப்படி மனுஷனால் பேச முடியும் ? நிருபர்ஹளுக்கு இது தெரிந்தும் கேள்வி கேட்கிறார்கள் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
12 ஏப்,2026 - 16:07 Report Abuse
நீங்கள் தான் தோல்வி பயத்தில் இப்படி உளறி கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் மத்தியில் கடும் பேச்சாக உள்ளது. 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
12 ஏப்,2026 - 13:31 Report Abuse
அடுத்த லண்டன் ட்ரிப் எப்போ? 0
0
Reply
தீய சக்தி ஒழிக. தமிழ்நாடு - ,
12 ஏப்,2026 - 13:17 Report Abuse
5 வருடங்கள் ஆட்சி முடிந்து இன்னும் குறை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.. என்னத்த சொல்ல. டிசைன் அப்படி.. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
12 ஏப்,2026 - 12:40 Report Abuse
போதை மருந்து பிரச்சனை எப்போதும் இல்லாத அளவில் தமிழக மக்களின் பாதுகாப்பை ஆடவைத்து உள்ளது. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
12 ஏப்,2026 - 12:27 Report Abuse
ஹா ஹா வெல்வோம் ஒன்றாக , எல்லோருக்கும் எல்லாமும் , ஓரணியில் தமிழகம் , ஒன்றிணைவோம் வா , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ,உங்களுடன் ஸ்டாலின் , மக்களை தேடி மருத்துவம் , இல்லம் தேடி கல்வி , நான் முதல்வன் திட்டம் , தவ புதல்வன் திட்டம் , புதுமை பெண் , உங்கள் கனவை சொல்லுங்கள் ,No 1 முதலமைச்சர் ஸ்டாலின் இது மட்டும் இன்றி காலை உணவு திட்டம் இப்படி திட்டங்களை செயல் படுத்தியவருக்கே வோட்டு 0
0
Ambedkumar - Chennai,இந்தியா
12 ஏப்,2026 - 13:09Report Abuse
இதில் ஏதாவது ஒன்று உருப்படியாய் யாருக்காவது நன்மை செய்ததா? 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
12 ஏப்,2026 - 13:12Report Abuse
நீங்கள் முதல்வரை கேலி செய்கிறீர்களா? எப்படி இது எழுத முடிகிறது ஆனால் உங்கள் நகைச்சுவை எனக்குப் பிடித்திருக்கிறது. 0
0
அக்மார்க் தேன் - ,
12 ஏப்,2026 - 13:49Report Abuse
ஒரு பழைய திரைப்படத்தில் ஒரு நான்கு கால் பிராணியை காண்பித்து நாகேஷ் அதன் உரிமையாளரிடம் கேட்பார்!ஏம்ப்பா இந்தப் பிராணிக்கு பேரு வச்சியே!அதுக்கு சோறு வச்சியா? அப்படீன்னு. அந்த வசனம்தான் இத்தனை பெயர்களையும் பார்த்த பின்பு நினைவுக்கு வருகிறது. 0
0
Kumar Kumzi - ,இந்தியா
12 ஏப்,2026 - 14:08Report Abuse
இந்துமத ஜென்ம விரோதி திருப்பரங்குன்றம் முருகன்னின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது 0
0
ஆரூர் ரங் - ,
12 ஏப்,2026 - 15:56Report Abuse
ஒன்றிணைவோம் வான்னு சொல்லப்போய் தான் மிஸ் சால உள்ளே தள்ளப்பட்டார். இன்னுமா பாடம் கற்கவில்லை ? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
12 ஏப்,2026 - 12:27 Report Abuse
நம்மிடம் வாங்கும் வரியில் 23 தான் திரும்பி வருகிறது அனால் UP க்கு 300 போகிறது கேட்டால் தமிழ்நாடு திராவிடமாடல் வளர்ந்து விட்டதாம் என்னவோ இந்த கூட்டம் தான் வளர்த்தது போல 0
0
Ambedkumar - Chennai,இந்தியா
12 ஏப்,2026 - 13:11Report Abuse
16 வது நிதிக்குழு அறிக்கையில் நிதிப்பகிர்வு தமிழநாட்டிற்கு அதிகமாகவும் பல பாஜக ஆளும் மாநிலங்களுக்கு குறைவாகவும் அளிக்கப்பட்டுள்ளது 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
12 ஏப்,2026 - 13:14Report Abuse
நீங்கள் 23 என்கிறீர்கள் உதயநிதி 27 என்கிறார்கள். கரெக்டா எழுதி கொண்டு வாருங்கள். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 ஏப்,2026 - 12:21 Report Abuse
இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், ஸ்டாலின் முதல்கொண்டு ஒருவித விரக்தியில், பயத்தில் உள்ளனர். ஜெயிப்போமா, தோற்போமா என்கிற அச்சத்தில் உள்ளனர். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
12 ஏப்,2026 - 12:16 Report Abuse
கருங்காலி தடி இல்லாமல் நடை பற்ச்சிக்கு போகிறீர்கள் . இதுயென்ன புதிய பகுத்தறிவு ? 0
0
Reply
மேலும் 35 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement