தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
நமது நிருபர்
அ .தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிடும் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சில பிரச்னைகள் இருந்தன. 'இதை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது. அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு தாவி, இப்போது எம்.பி.,யாக இருப்பவரும் வந்து விட்டாராம். இரண்டு கழகங்களுக்கிடையே விவாதம் காரசாரமாக மாற, உடனே மேலதிகாரிகள் வந்தனர்.
சென்னையிலுள்ள தேர்தல் அதிகாரிக்கும் போன் பறந்தது. இதற்கிடையே, தலைமை செயலர் போன் வேறு வந்ததாம். இதனால், தி.மு.க., வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதே போல, வேறு சில இடங்களிலும் பிரச்னை வந்துள்ளது. ஆனால், இந்த அனைத்து இடங்களிலும், தி.மு.க.,வுக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி, 20க்கும் மேற்பட்ட புகார்கள் தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பப்பட்டதாம். தவிர, பல போன்கால்களும் பறந்தனவாம். தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், சட்டத்தை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். தமிழகத்தில், தேர்தல் எப்படி நேர்மையாக நடக்கும் என, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.
இதையடுத்து, அவசர அவசரமாக தலைமை தேர்தல் கமிஷனரும், மற்ற இரண்டு கமிஷனர்களும் இரவு ஆலோசனை நடத்தினர். தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலை அனுப்பும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.
அவர் அனுப்பிய பட்டியலிலிருந்து, 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய் குமார் தலைமை செயலராக நியமிக்கப்பட்டு, முருகானந்தம் மாற்றப்பட்டார். தவிர, தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதவியிலும் முருகானந்தம் நியமிக்கப்படக்கூடாது என்றும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (28)
venugopal s - ,
12 ஏப்,2026 - 20:03 Report Abuse
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் எடுக்க தைரியம் உண்டா? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
12 ஏப்,2026 - 14:56 Report Abuse
திமுகா திரும்ப வராவிட்டால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விவகாரம் பெரும் தலைவலியாகிவிடும் என முருகன் ஆனந்தமாய் விதி முறைகளை அனுமதிப்பது வியப்பில்லை என விவரம் புரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்களாம். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
12 ஏப்,2026 - 13:45 Report Abuse
மாநில அரசின் அதிகாரிகளிலிருந்து நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக மாற்றுபவர்கள் பெரும்பாலும் பிராந்திய அரசியல் கட்சிகளின் அடைமைச் சேவகர்களாகவே இருக்கிறார்கள்.. குறிப்பாக தமிழகத்தில் 1970 களில் பிடித்த இந்த நோய் அழுகி புரையோடி போய் உள்ளது.... நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை அவர்கள் பதவிக்காலம் முடியும் வரை பிற மாநிலங்களில் பணிபுரிய வைக்க வேண்டும்....அரசின் நெளிவு சுளிவுகளை நன்றாக அறிந்த இவர்கள் பெரும்பாலும் தேசவிரோத சமூக விரோத ஹிந்து விரோத சாதி அடிமை அரசியல் கட்சிகளின் பணம் பதவி சில்லறை சுகங்களுக்கு அடிமையாகி சட்டவிரோத தேசவிரோத செயல்களை கூச்சம் அச்சம் இன்றி செய்யும் மனநிலைக்கு மாறிவிடுகிறார்கள்.... இவர்களுக்கு சொந்த மாநில போஸ்டிங் தேவையற்றது 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
12 ஏப்,2026 - 12:57 Report Abuse
எடப்பாடி பழனிசாமி ஜெ.ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அப்போது அந்த துறை செயலாளர் சாய்குமார். நமக்கு எல்லா ஒரு மாநில பொதுப்பணித்துறை குறித்து ரொம்போ நல்லா தெரியும் ... ரொம்போ ரொம்போ நல்லா தெரியும் அல்லவா ??
""மாதப்படி"" வழங்க ஒப்புக்கொண்டு முதல்வரான பிறகு இதே சாய்குமார் எடப்பாடியின் முதன்மை தனி செயலாளர். இது எப்படி இருக்கு ?? தலைமை செயலாளர் பதவிக்கு தகுதி படைத்தோர் பலர் இருக்கும் நிலையில் குறிப்பாக மற்றும் சரியாக சாய்குமார் அந்த பதவியில் அமர்த்தப்படுவது தற்செயல் நிகழ்வா இல்லை கணக்கு போட்டு காய்நகர்த்தும் அநியாய நிகழ்வா ?? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
12 ஏப்,2026 - 12:31 Report Abuse
WIFI துண்டித்து விட்டால் சிஸ்டம் வேலை செயாது என்று அறியாமை HOTSPOT எல்லாம் நாங்கள் வேலை செய்து இருக்கிறோம் , ஆகவே எதை ஒலித்தாலும் இல்லை யாரை மாற்றினாலும் வோட்டு போட போவது மக்கள் அப்புறம் என்ன 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
12 ஏப்,2026 - 12:30 Report Abuse
முருகானந்தம் திமுக...வுக்கு ஆதரவா வேலை செஞ்சார்னு குற்றம் சாட்டி தூக்குனீங்க...? இந்த சாய்குமார்... எடப்பாடி முதலமைச்சராக இருந்தப்ப செக்ட்ரட்டரியாக இருந்தவராச்சே... இவர் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கமாட்டாரா...? 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
12 ஏப்,2026 - 12:25 Report Abuse
0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
12 ஏப்,2026 - 12:42Report Abuse
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இதை பொறுத்தவேணுமா இல்லை வெறும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் இதை அமல்படுத்தணுமா ???? தெளிவா சொல்லிடுங்களேன் ? 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
12 ஏப்,2026 - 12:05 Report Abuse
ஓய்விற்கு பின்னால் மிக பெரிய பதவி, வீடு, மனைகள், பணத்தால் சலுகை, குடும்ப உறுப்பினர்களுக்கு அரசில் உயர் பதவி போன்ற காரணத்தால் IAS IPS IFS படிக்காமல் தமிழக A பிரிவு அதிகாரிகள் இதை செய்வது நடந்தது. இப்போது இந்த நோய் படித்த IAS IPS IFS அதிகாரிகளுக்கும் பரவி உள்ளது நடக்கிறது.
இதை தவிர சாதி சார்ந்த அழுத்தம் மற்றும் தமிழகம், தகுதி இல்லாமல் விதிமுறையை மீறி அதிக அளவு பதவி உயர்வை அளிப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பல வடநாட்டு அதிகாரிகள் தமிழகம் வருவதை பார்க்க முடிகிறது. நேர்மையான தன்னொழுக்கம் உள்ள, அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போடாத அதிகாரிகள், மத்திய பணிக்கு செல்வதும் அதிகரித்து உள்ளது. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
12 ஏப்,2026 - 11:49 Report Abuse
மநன்ஜை துண்டு செய்த மகா அயோக்கியா வேலை. தமிழ்நாட்டு அரசு வேலை செய்த ஊழியர்களை வாச படுத்த கையாண்ட அரசு காஜானவை காலி செய்த வாரி வழங்கி பொங்கல் விடுமுறை என்ற பெயரில் ஒரு வாரம் விடுமுறை, வழக்கத்திற்கு மாறாகா வேறு மணிலா பண்டிகைகளுக்கு இங்க்கு விடுமுறை அந்தநாள் இன்று அறைய ஜாக்டோ ஜியோ தீ மூக்காயின் கொத்தடிமைய்யக்கலாகா மாற்றி தேர்தல் காலத்தில் பல தில்லு முள்ளுகள். சத்தம் போராடாமல் கம்யூனிட்ட்டுக்காலிய்ய கூட வைத்து கொண்டு அவர்கள் யூனியனை ஒழித்து தொமு சாவைய்ய நிறுவி கட்சி ஆட்களை பணியில் அமர்த்தி கஃய்ய்குள் வைத்து கொள்வது அதனை நரி தந்திரத்திற்கும் உத்தரம். ஸ் டாலினுக்கு அந்த தந்திரம் ஸிரோ. nil ஒன்றும் வராது. ஏற்காதோர் அப்பன் கால சுப்பன் கால தந்திரத்தால் கடையாணி கலலாமல் ஓடி கொண்டிருக்கு. 0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12 ஏப்,2026 - 11:41 Report Abuse
தலைமை செயலாளரை எந்த ஒரு குற்ற சாட்டும் இல்லாத நிலையில் மாற்றுவது சட்ட விரோதம், இதை விரைவில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சந்திக்கணும், அதற்க்கு முன் தானாக நிலைபாட்ட்டை மாற்றிக்கொண்டால் தேவலை, 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
பட்டினியில் வாடும் பழங்குடி மக்கள் குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள்
-
எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான் வளர்மதியிடம் வாக்காளர்கள் உறுதி
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
-
பாலமலை பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் வாக்குறுதி
-
ஐந்தாண்டு கஷ்டம்; இந்த மாதம் விடிவு! அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பிரசாரம்
-
தே.ஜ., கூட்டணி பக்கம் சாயும் ரஜினி, அஜித் ரசிகர்கள்
Advertisement
Advertisement