அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
நமது நிருபர்
பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி 'ஈரான் நாகரிகத்தையே அழித்துவிடுவேன்' என அதிபர் டிரம்ப் கொக்கரித்தார்; அதற்காக கெடு விதித்திருந்தார். இதனால், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பதற்றம் எழுந்தது.
கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பை இஸ்லாமாபாதில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். இதை இரு தரப்பும் ஏற்றன.
பேச்சுவார்த்தை
ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினமே இதற்காக இஸ்லாமாபாத் வந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினர் நேற்று காலை இஸ்லாமாபாத் வந்தனர். ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பினர் தனித் தனியே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
தோல்வி
இதில், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்வைப்புகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இவ்வாறு மாறி மாறி கூட்டங்கள் நடந்தன. இதனால், அமைதி பேச்சுக்கான கூட்டம் ஐந்து மணி நேரம் தாமதமாகி மாலை துவங்கி 20 மணி நேரமாக நடந்தது.
எனினும் இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் குழுவினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனஅமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
ஜே.டி.வான்ஸ் பேட்டி
நிருபர்களிடம் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானில் 21 மணி நேரமாக நடைபெற்ற அமைதி பேச்சு எவ்வித முடிவும் இன்றி நிறைவு பெற்றது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எங்கள் குழு அமெரிக்கா திரும்புகிறது, என்றார். பேச்சு தோல்வி அடைந்துள்ளதால் மீண்டும் போர் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்தப்போரில் சம்பந்தப்பட்ட இஸ்ரேலை அழைக்காமல் பேச்சு வார்த்தை எப்படி வெற்றி அடையும்? இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று துடிக்கும் இரானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இதை அறிவார்களா? அதுவும் பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம். அமேரிக்கா இரான் இரண்டின் வால்களையும் நறுக்கினால்தான் விடிவு காலம் பிறக்கும்
ஈரான் அமெரிக்கா சண்டை அதைவிட சிறியது வீரமணியால் இந்த சண்டையை எளிதில் நிறுத்த முடியும தன் வாரிசுகள அமெரிக்காவில் இருப்பதால் அவர் அமெரி்க்கா பக்கம் சாய்ந்து விட்டார். முஸ்லிம் வாக்கு தி.மு.க. விழாது திமுக. படுதோல்வி அடையும். மூலகாரணம் வீரமணி.
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யத் தகுதியற்ற நாடு .... காரணம் அனைத்துத் தரப்பினருக்கும் உடன்பாடான தீர்வினை அதனால் தரமுடியாது .... அமெரிக்காவும் புத்திகெட்டுப்போய் உடன்பட்டது தவறு .....
இந்தபோரில் சம்பந்தப்பட்ட இஸ்ரேல் இந்த சமாதானப்பேச்சுக்கு அழைக்கப்படவில்லை. பாகிஸ்தானோ இஸ்ரேலின் எதிரி நாடு. நல்லா விளங்கும்
யுரேனியம் செறிவூட்டல் மற்றும் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தை நிறுத்த ஈரான் மறுத்ததால், பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பயணித்த அமெரிக்க விமானப்படையின் விமானம் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தங்கள் விடுதிச் செலவுகளைச் செலுத்தாமலேயே கிளம்பிச் சென்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் இராணுவ மற்றும் அரசியல் தலைமைக்கு இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விடுதிச் செலவுகளைச் செலுத்துமாறு அரசியல் தலைமை இராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது அதேவேளையில், அரசியல் தலைமைதான் அந்தச் செலவுகளைச் செலுத்த வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தை தோல்வி. அப்படியென்றால் பாக்கிஸ்தான் ஷபாஸ் ஷெரீப் நோபல் அமைதி பரிசு கனவு தகர்ந்தது.
அய்யயோ, அப்ப அந்த டிரம்ப் என்கிற வேதாளம் மீண்டும் போர் என்கிற முருங்கை மரத்தில ஏறிடுமே.. பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் தட்டுப்பாடு மீண்டும் அதிகரிக்கும். டிரம்ப் ஒழியவேண்டும். அதேபோல தமிழகத்தில் திமுக ஒழியவேண்டும்.
சட்டுபுட்டுனு காரியத்தை முடிங்க தலைவா டிரம்ப்... டைம் வேஸ்ட் ஆகுதுல்லே...தீவிரவாதத்திற்கு உதவி செய்பவரும் தீவிரவாதம் வளர்ப்பதும் தவறுன்னு இனி பேசிக்கிட்டே இருக்க வேண்டாம்.
முயற்சிகள் தோற்கலாம்... முயற்சி செய்யத் தோற்கலாமா
இரான் மற்றும் பாக்கிஸ்தான் தீவிரவாதிவாதிகளை உருவாக்கும் நாடுகள்மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்