'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரில் 'பூத் சிலீப்' வழங்கும் பணி துவங்கியது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், 'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று 'பூத் சிலீப்'பினை வழங்குவர். இதில், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், ஓட்டுப்பதிவு நேரம் உட்பட பல்வேறு தகவல்கள் இருக்கும்.

'பூத் சிலிப்' மூலம் வாக்காளர்கள் தங்களது ஓட்டுச் சாவடி தொடர்பான தகவ ல் களை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். ஓட்டு போடுவதற்கான அடையாள ஆவணமாக பூத் சிலீப் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

அப்போது, ஆர்.டி.ஓ., முருகன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement