மாடியில் இருந்து விழுந்து கொத்தனார் பலத்த காயம்

வேளச்சேரி: இரண்டாவது மாடியில் நின்று, பணி செய்து கொண்டிருந்த கொத்தனார், தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஹாங்கிர் ஆலம், 48; கொத்தனார். வேளச்சேரி, உதயம் நகரில் ஒரு வீடு கட்டும் பணியில், நேற்று ஈடுபட்டிருந்தார்.

இரண்டாவது மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில், கழுத்து, இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேளச்சேரி போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ததால், கட்டுமான பணி மேற்பார்வையாளர் ரமேஷ், 35, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement