அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
சென்னை: சட்டசபை தேர்தல், தொகுதி பங்கீடு என அரசியல் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக எகிறி வரும் சூழலில் தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, மாம்பழத்துறை, அணைகெடங்கு பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்தது.
இந்த சூழலில், மன்னார் வளைகுடா முதல், வடக்கு உள் கர்நாடகா வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 23, 24ம் தேதிகளில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்.
வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம்
தேர்தல் நேரத்தில் ஒரு விருவிருப்பான பழைய காலத்து ஜாம்பவான்கள் நடித்த சிவாஜி-எம்.ஜி.ஆர்- ஜெமினி
படம் பார்ப்பதை போல் இருக்கும் என எதிர்பார்த்த நமக்கு இந்த நாட்களில் வரும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களை போல் காட்சிகள் மாறாமல் சொன்ன விஷயத்தையே மாற்றி மாற்றி கூறி போரடித்து வருகிறார்கள். மொத்தத்தில் இரண்டு கட்சியில் இருக்கும் பெரிய மற்றும் சிறிய கட்சிகள் எதுவுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லைமேலும்
-
டவுன் சிண்ட்ரோம் தின விழா
-
தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்
-
கட்டுமான தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
-
சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் அ.தி.மு.க.,வினரிடையே போட்டி
-
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு தமிழர் மீனவர் கூட்டமைப்பு ஆதரவு
-
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை 6 மாதங்களுக்கு சம்பளம் 'கட்': ஹிமாச்சல் அரசு திடீர் முடிவு