பெண்ணிடம் ரூ. 42 லட்சம் மோசடி :சைபர் கிரைம் போலீசார் விசாரணை
விழுப்புரம்: ஆன்லைனில் முதலீடு செய்வதாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளரிடம் ரூ.42 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் தேவநாத சுவாமி நகரை சேர்ந்தவர் 40 வயது பெண். மெடிக்கல் ஷாப் உரிமையாளர். இவரது மொபைல் போன் வாட்ஸ் ஆப்பிற்கு, கடந்த பிப்., 27ம் தேதி மர்ம நபர், இ-விக்டரி வேன் கார்ட் என்ற வாட்ஸ்ஆப் என்ற குழுவின் மூலம், ஆன்லைன் மூலம் வேலை அளிப்பதாக தகவல் அனுப்பியுள்ளார்.
இதனை நம்பிய அப்பெண், அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்கிற்கு சென்று அவர்கள் குறிப்பிட்டபடி முதலீடு செய்வது குறித்து சாட் செய்துள்ளார். தனக்கென ஒரு யூசர் ஐடி தயாரித்து, அவர்கள் கூறியபடி, ஒரு மொபைல் போன் ஆப் மூலம், அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்., 27ம் தேதி முதல், மார்ச் 18ம் தேதி வரையில், 10 தவணையாக ரூ. 42 லட்சத்து 23 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். பிறகு, அந்த மர்ம நபர் கூறியபடி பங்கை தொகை தராமல் ஏமாற்றியுள்ளார். தான், ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.