தமிழகத்தில் வெப்பம் 3 டிகிரி உயரும்

சென்னை: 'தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்த சூழலில், மன்னார் வளைகுடா முதல், வடக்கு உள் கர்நாடகா வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை, நாளை மறுநாள், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்.

வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement