மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: ''திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; தனது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: மக்களை பற்றி கவலை இல்லை; எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுவார். திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது.
எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, கிராமம் முதல் நகரம் வரை சந்து, பொந்து, வீதிகள் என அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை கட்டுப்படுத்த இந்த அரசால் முடியவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கஞ்சா விற்பனைக்கு துணை நிற்பது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என்று பரவலாக பேசப்படுகிறது. அதனால் தான் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
போதைப்பொருள்
ஒரு டிஜிபி இருந்தார், கஞ்சாவை தமிழகத்தில் தடுப்பதற்கு 2.0 போட்டார். 3.0 போட்டார், 4.0 போட்டார். கடையில் ஓ போட்டுவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஏனென்றால் கஞ்சா விற்பனையில் திமுக விற்பனையில் ஈடுபட்டிருந்தால் எப்படி போய் தடுக்க முடியும்?
ஆக, இந்த திமுக ஆட்சி இருக்கும் வரை கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாது. அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் தமிழகத்தில் மூன்றே மாதத்தில் கஞ்சா என்ற போதைப்பொருள் முழுவதுமாக ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடத்தப்படும். அதிமுக ஆட்சி அப்படித் தான் நடந்தது. அதனால் தான் எங்கள் ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாது இருந்தது.
குடும்ப ஆட்சி
திமுக ஆட்சியில் கருணாநிதியாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் குடும்ப ஆட்சி தான். நான்கு அதிகார மையம் உள்ளது. ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின், சபரீசன் என நான்கு பேர் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஏழை மக்களுக்கான திட்டங்களை கொடுக்க அதிமுக அரசு அனைத்து தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றித்தரும். திறமையான ஆட்சியை அதிமுகவால் தான் கொடுக்க முடியும். எனவே நீங்கள் ஆதரிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
அதான் 3 தலைமுறைக்கு சம்பத்தி கணக்குல சேர்த்தாச்சே ! இனி என்ன கவலை?
தமிழனுக்கு துரோகம், தமிழனைச் சுரண்டி ஊழல், தமிழனுக்குத் திட்டம் என்று சொல்லிக் கொள்ளை இவற்றின் மொத்த உருவம் திமுக ..... இருந்தாலும் திமுகவை மக்கள் நம்பறாங்களே ????
எடப்பாடி அவர்களே முகஸ் டமில் நாட்டு மக்களின் குடும்பத்தை பத்தி தான் கவலைப் படுகிறார். அதுனால தான் ரூ 8000 கூப்பன் பிரபலமாகி இருக்கு. ஏற்கனவே கொஞ்சம்கூட யோசிக்காம மகளிர் வங்கியில் ராத்திரியோட ராத்திரியாய் ரூ 5000 போட்டுட்டாருங்க. மகளிர் எல்லாம் மகிழ்ச்சி ஆகி எப்போ எலக்ஷன் வரும் நான் ஓட்டு போடணும் ன்னு தினமும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. எடப்பாடி அவர்களே நீங்களும் இது மாதிரி 10000 டோக்கன் போட்டு உடுங்க. அத்தனை ஓட்டுகளும் உங்களுக்கே தான். திமுகவின் அடிவருடிகள் கூட உங்களுக்கே ஓட்டு போட்டுடுவாங்க.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைத்ததா?
“மோடி கொடுத்த வாக்குறுதிப்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், ‘பொத்தென்று’ வந்து விழுந்ததா? விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று சொன்ன வாக்குறுதி என்னாயிற்று? ஆண்டுதோறும் 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு வந்ததா?
குடும்ப அரசியல்தமிழ் நாட்டில் க்கு பிறகு அவர் மனைவி ஜானகி முதல்வர் ஆனார் , ஜானகி க்கு பிறகு JAYA எப்படி எந்த முறையில் முதல்வர் ஆனார் ஏன் வேறு யாரும் இல்லையா கட்சியில் ,கட்சிக்காக ழைத்தவர்கள் இருக்க ஜெயா எப்படி முதல்வர் ஆனார் இது குடும்ப அரசியல் இல்லாமல் வேறு என்ன அரசியல்
ஜெயாவுக்கு அசாத்திய நிர்வாக திறமை இருந்தது. திறம்பட ஆட்சி நடத்தினார். எடப்பாடிக்கும் மக்கள் மேல் அக்கறை இருந்தது. கோரோனா காலத்தில் திறமையால் எல்லாவற்றையும் சமாளித்தார்.கிராம புறங்களில் தீயமுக காரனுங்களே எடப்பாடி மேல் நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கானுங்க.
மக்களை பற்றிய கவலையை விட அதிமுக பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்றிக்கொள்வதே பெரும் கவலையைக உள்ளது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு, கூட்டணி என்ற பெயரில் ஓரமாக இருந்தவரை கொண்டு வந்து கூடத்தில் உட்கார வைத்து விட்டார்கள் என்ற கவலையே பெரும் கவலையைகாக மாறி உள்ளது
தலையில் பானையை கழுத்து போட்டுகிட்டு தன்னோடு ஆட்களுக்கே ஓட்டு போட வேண்டாம் ன்னு பிரசாரம் பண்ணிய அவலத்தை எங்காவது இதுவரை பாத்திருக்கோமா? 30 வருட கூட்டு+ ஆணி லட்சணமே அப்புடி இருக்கு. உங்க முதுகுல ஓடுவதை பாருங்கடா. அடுத்தவன் வீட்டு ஜன்னலை அப்பறம் பார்க்கலாம்.
ஸ்டாலின், மக்கள் என்று சொன்னது அவர் குடும்பத்து சொந்தபந்தங்களை. நீங்க மக்கள் என்றால், தமிழக பொதுமக்கள் என்று எடுத்துக்கொண்டால்.... தவறு யாருடையது?
மக்கள் அல்லும் பகலும் வெறும் கல்லாக இருந்து குறட்டை விட்டால் - அவர்கள் கோட்டையை பிடிக்கிறார்கள்! நாட்டை கெடுத்து தாம் மட்டும் வாழ்கிறார்கள்! விழிப்புடன் இந்த தேர்தலில் ஆவது பெருவாரியாக திரண்டு வந்து வாக்களியுங்கள் மக்களே!மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை