பலத்த காற்று வீசியதால் சாய்ந்த வாழை மரங்கள்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் வாழை விவ-சாயம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஓரிரு நாட்க-ளுக்கு முன், இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால், சமயசங்கிலி பகுதியில் சாகுபடி செய்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதுகுறித்து, வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி பூங்கொடி கூறுகையில், ''இரண்டு ஏக்கரில் பூ வாழை, தேன் வாழை சாகுபடி செய்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் வாழை தார் அறுவடைக்கு வந்து விடும்.

கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் காற்று வீசியது. இதில் சாகு-படி செய்த, 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement