திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
சென்னை: திமுக - காங்., கூட்டணி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி கட்சியினர் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும் என தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று (மார்ச் 23) இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வந்த தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றனர். பிறகு நிருபர்கள் சந்திப்பில் பியூஷ் கோயல் கூறியதாவது:
அதிருப்தி
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வியை சந்திக்கின்றன. தமிழகம் மாற்றத்திற்கு தயாராக உள்ளது. தமிழக அரசியலில் புதிய தொடக்கம்; மாற்றத்தை மக்கள் வரவேற்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
குடும்பம் போல்..
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். வளர்ந்த தேசத்திற்கு வளர்ந்த தமிழகம் வழிவகுக்கும். தேஜ கூட்டணி ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருகிறது. ஊழல் கறை படிந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு நடைபெறும்.
தொகுதி பங்கீடு
கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கிட்டு விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் வளர்ச்சிக்கான அரசு அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
பியூஸ் கோயல் மீதும் மக்கள் அதிருப்தி... பாஜகவுக்கு 27 தொகுதிகள்தான் பெறமுடிந்ததா ? அதற்கு வடக்கிலிருந்து நீங்கள் வந்திருக்க வேண்டாமே
போன ,இந்த ஆட்சிகளில் ஊழல் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க தவறியதினால் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்
கூட்டணியில் எந்த விதமான பிளவும் இல்லை என்றும், அனைவரும் ஒரே குடும்பம் போல இணைந்து சிரிப்பு கோயல் அவர்களே இவர்கள் குடும்பமா இனைந்து கூவத்தூரில் குஜாலா இருந்த கூட்டம் தான் இது மீண்டும் அவர்களுக்கு ஜாபகம் படுத்திவிட போகிறீர்கள்
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாத பரம ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆசை பகல்கணவு
முதலில் உங்க கூட்டணி விரக்தியை சரி செய்யுங்கோ
டபுள் எஞ்சின் சர்க்கார் எல்லாம் ஏமாற்று வேலை , 10000 கோடி செலவு செய்து மழைக்கு , கார்கள் முழுகும் அளவுக்கு தண்ணீர் நின்றது , மணிப்பூர் டபுள் எஞ்சின் சர்க்கார் தான் என்ன ஆனது, டெல்லி டபுள் எஞ்சின் சர்க்கார் மூச்சு விட சிரமப்படும் அளவுக்கு இருக்கு ஆகவே திராவிட மாடல் தான் டாப் சர்க்கார்
மதவாத சகதிகளை மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள் கோயல் அவர்களே முதலில் உங்கள் கூட்டணியை முடிக்க பாருங்கள்
மத்தியில் இருப்பவர்கள் அரசியல் செய்யாமல் போனால் திமுக தான் வெற்றிபெற முடியும். எவ்வளவோ ஊழல்களை மக்கள் மத்தியில் தெரிந்தும் கூட அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மத்திய அரசாங்கம் மௌனம் காக்கிறது. பிரதமரும் கூறுகின்றார். உள்துறை அமைச்சரும் கூறினார் திமுகவின் ஊழல் விவரங்களையெல்லாம். ஏன் இன்னும் அமைதியாக அரசியல் சென்று கொண்டுள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி வெளிப்படுகின்றது. கெஜ்ரிவால் மீது ஒரே இரவில் நடவடிக்கை எடுக்க தெரிந்த மத்திய அரசாங்கம் ஏன் திமுகவினர் மீது சாஃப்ட் அணுகுமுறை என்பதில்தான் குறையாக தெரிகின்றது மக்களிடம்.. ஏகப்பட்ட ஊழல்களை மக்கள் அறிந்தும் கூட, என்ன சொல்வது? நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகின்றார்களே என்கிற மன அழுத்தம் வருத்தமடைய செய்கின்றது.
அண்ணாமலை அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்திருக்க வேண்டும். அவருடைய திறமையை பாஜக வீணடித்துவிட்டது..
உங்க கூட்டணி மீது அதை விட டபுள் டபுள் விரக்தி
திமுகவின் மீதிருந்த விரக்தி இப்போது கையாலாகாத பாஜக வெட்டிப் பிடிவாதத்தால் கூட்டணிக்கு கட்சிகளைச் ஏறவிடாமல் செய்த அஇஅதிமுக இவற்றால் வேறு வழியின்றி மாறிப் போனது இப்போது அறியாத தேவதையான தா வே கவை விட அறிந்த பிசாசான திமுகவே மேல் என்ற நிலைக்கு மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள் கள நிலவரம் அறியாத மொழியும் அறியாத பாஜக மேலிடம் முடிந்தவரை தமிழகத்தில் ஏதேனுமொரு கழகத்தை அழிப்பதில்தான் குறியாக இருக்கிறது இபிஎஸ் ஏமாந்து போகப் போகிறார்
டாஸ்மாக் மாடல் 1.0 கஞ்சா மாடல் 1.0 கற்பழிப்பு மாடல் 1.0 கொலை கொள்ளை மாடல் 1.0....நாடக மாடல் 1.0 முடிவுக்கு வரும். தேசிய. மாடல் 2.0 ஆட்சிக்கு வரும்மேலும்
-
தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., 27+18+11 ஒதுக்கீடு!
-
கேப்டன் அக்சர் படேலுக்கு பிடிக்கல... * 'இம்பேக்ட்' வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு
-
தேசிய உள்ளரங்கு தடகளம் * புவனேஸ்வரில் இன்று ஆரம்பம்
-
ஈஸ்ட் பெங்கால் கோல் மழை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
-
நீச்சல்: சஜன் பிரகாஷ் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி
-
அண்டா, குண்டா, மிக்சி கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர்: சீமான்