சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி 10வது வார்டுக்கு உட்பட்ட, ஆம்பூர்பேட்டை, எஸ்.ஆர்.,குப்புசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன், 65. இவர் மனைவி தமிழ்செல்வி, 60.
தங்களது வீடு அமைந்துள்ள பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் வசதி செய்து தரக்கோரி, நகராட்சி நிர்வாகம் மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த தம்பதி, நேற்று திடீரென வாணியம்பாடி - உதயேந்திரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், வாணியம்பாடி டவுன் போலீசார் பேச்சு நடத்தி, தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, மறியலை கைவிட செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை; இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்
-
இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக தூக்கியெறிப்படும்; நயினார்
-
வேட்பாளரை அறிவித்த பிறகு நேமகவுடன் தவெக கூட்டணி; 2 தொகுதிகள் ஒதுக்கீடு
-
புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு கூடுதல் தலைவலி; தேமுதிகவும் போட்டி என அறிவிப்பு
-
பட்டியலின விவசாயி படுகொலைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? திருமாவுக்கு இபிஎஸ் கேள்வி
-
லோக்சபாவில் இன்று மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி உரை
Advertisement
Advertisement