மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை

திருப்பூர்: மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதால், 2வது கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவாரூரை சேர்ந்தவர் கலைச்செல்வி, 44. இவரது கணவர் சில ஆண்டுகள் முன் இறந்தார். இரு மகள்கள் உள்ளனர். ஓராண்டுக்கு முன், தன்னுடன் வேலை பார்த்த ராஜேஷ், 36, என்பவரை, கலைச்செல்வி இரண்டாவதாக திருமணம் செய்தார். இருவரும், திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. பின், இருவரும் சாப்பிட்டு துாங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது, மனைவி இறந்தது தெரிந்தது. சென்ட்ரல் போலீசார் விசாரித்தனர். கலைச்செல்வி உடலில், கண் உள்ளிட்ட சில இடங்கள் வீங்கியுள்ளன. நக கீறல்கள் உள்ளன. ஆடையில், ரத்தம் வடிந்த கறை உள்ளது. இதன் காரணமாக, ராஜேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'பிரேதப் பரிசோதனைக்குப் பின், விசாரணை தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.

Advertisement