பெண்ணிடம் ரூ.45,000 பறிப்பு
ப.வேலுார்:நாமக்கல்
மாவட்டம், ப.வேலுார், தில்லை நகரை சேர்ந்த கர்ணன் மனைவி இலக்கியா, 40;
டைலர். இவர், நேற்று முன்-தினம், ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் உள்ள
இந்-தியன் வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அங்கு இருந்த
ஏ.டி.எம்.,ல் பணம் வரவில்லை. அப்போது அங்கு இருந்த மர்ம நபர்
ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக இலக்கி-யாவிடம் பேசி உள்ளார். அதை
நம்பி தன் ஏ.டி.எம்., கார்டை மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். சிறிது
நேரத்தில், ஏ.டி.எம்., வேலை செய்யவில்லை என, ஏ.டி.எம்., கார்டை திரும்ப
கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து, அவசர தேவைக்காக இலக்கியா பணம்
எடுக்க, ப.வேலுார் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி
கணக்கில் இருந்து, 45,000 ரூபாய் தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதை
கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, எ.டி.எம்., கார்டை
சரிபார்த்தபோது, மாற்று ஏ.டி.எம்., கார்டை மர்ம நபர் கொடுத்தது
தெரியவந்தது. ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
-
தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'