தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'

பேராவூரணி: பணி செய்யவிடாமல் தடுத்ததாக, தேர்தல் பிரி வு அலுவலர் அளித்த புகாரில், பா.ஜ., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது.

அப்போது, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றனர் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர் வீரசிங்கம், 56, வாக்குவாதம் செய்தார்.

அரசு அலுவலரான தன்னை, தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ராஜ்குமார் அளித்த புகாரில், பேராவூரணி போலீசார், இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, வீரசிங்கத்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement