உலக வன தினம் கொண்டாட்டம்

பாலக்கோடு:பாலக்கோடு அருகே, மேக்லாம்பட்டி ஏரிக்கரையில், உலக வன தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில், மரக்கன்றுகள் நட்டனர்.


காடுகளின் முக்கியத்துவம், மரங்களின் நன்மைகள் மற்றும் சுற்-றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஐக்-கிய நாடுகள் சபையால், மார்ச், 21ஐ உலக வன தினமாக, 2012-ல் அறிவிக்கப்பட்டது. இந்நாளில் காடுகளை வளர்க்கவும், பாது-காக்கவும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்ப-டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக வன தினம் மார்ச், 21 அன்று கொண்டாடப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம் சார்பில், கடமடை பஞ்.,க்கு உட்பட்ட மேக்லாம்-பட்டி ஏரிக்கரையில், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலை-மையில், ஆலம், அரசன், நாவல், மூங்கில் ஆகிய மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இதில், வன பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Advertisement