ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

சேலம்:ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சேலம் முதல் அக்ஹாரத்தில் உள்ள ஜாமியா மஜீத்தில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமான இஸ்லாமியர், புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


அதேபோல் கோட்டை, கல்லாங்குத்து, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, குமாரசாமிப்பட்டி, அஸ்தம்பட்டி, கோரிமேடு உள்பட, மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதி, தர்-காவில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின் நண்பர்கள், உறவினர்களுக்குபிரியாணி வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.


ஓமலுார் ஜாமியா மசூதியில் முத்தவல்லி ரஜாக் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர், ஊர்வல-மாக ஈத்கா மைதானத்துக்கு சென்றனர். அங்கு தலைமை இமாம் கலீல் அகமது தலைமையில் ஒரு மணி நேரம் நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமானோர் பங்கேற்றனர்.



சங்ககிரி மலை அடிவாரம் முஸ்லிம் தெருவில் இருந்து தேர்-வீதி, புதிய இடைப்பாடி சாலை வழியே ஈத்கா மைதானத்துக்கு பலர் ஊர்வலமாக சென்று, காஜி முஹமது உவைஸ் தலை-மையில் தொழுகையில் ஈடுபட்டனர். சங்ககிரி பயணியர் விடுதி சாலை, முஸ்லிம் தெரு, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.


கெங்கவல்லி, இலுப்பை தோப்பில் சிறப்பு தொழுகை நடந்-தது. அதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஒருவரை யொருவர் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், தலைவாசல், வீரகனுார், தம்-மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

Advertisement