திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
நமது நிருபர்
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
பா.ம.க., சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் வேல்முருகன். அந்த கட்சியில் இருந்து விலகி, தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.
கூட்டணியில் இருந்தபோதும், சட்டசபையில் அடிக்கடி அமைச்சர்களுடனும், சபாநாயகர் உடனும் வாக்குவாதம் செய்வதை வேல்முருகன் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் திமுக தரப்பில் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இத்தகைய சூழலில், இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று ஆரம்பம் முதலே வேல்முருகன் வலியுறுத்தி வந்தார். அதை திமுக ஏற்கவில்லை.
இரு நாட்களுக்கு முன் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை வேல்முருகன் மறுத்தார். இந்நிலையில் இன்று, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவரே அறிவித்தார்.
தவாக விலகல்
நிருபர்கள் சந்திப்பில் வேல்முருகன் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை திமுக பொருட்படுத்தவில்லை. 10 கோரிக்கைகளை திமுகவிடம் முன்வைத்தேன். திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே கூறியுள்ளனர். சமூகநீதிக்கு எதிரான சக்திகளை திமுக உடன் வைத்துள்ளது.
சட்டசபையில் ஒற்றை ஆளாய் போராடினேன். திமுக எங்களை புறக்கணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுகிறது. வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கி உடையது தவாக. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
@block_P@
நிருபர்கள் சந்திப்பில் வேல்முருகன் கூறுகையில், ''கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்த அமைச்சர்கள், எந்த துணை செயலாளர்கள் யார் எங்கே எந்த துறையில் தவறு செய்து இருக்கிறார்கள் என்ற எல்லா புள்ளி விபரங்களும் என் கையில் இருக்கிறது. எல்லாவற்றையும் ஆதாரப்பூர்வமாக நிருபர்கள் சந்திப்பில் அடுத்தடுத்து வெளியிடுவேன். இனிதான் இருக்கிறது. பாருங்கள். அதிகாரப்பூர்வமாக ஆவணமாக என்னிடம் இருக்கிறது'' என்றார்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இத்தனை நாள் அவர்களது தவறுக்கு துணைபோனதற்கே இவரைத் தூக்கி உள்ளே வெக்கணும்.
உதிரிக்கட்சிகள் ஒதுக்கப்படவேண்டும்.
ஹலோ நீ THAVAI ILLA THA ANNEEE OK POIVAAA. POO VARATHEYYYY
ஒரு 10, 15 இடத்தில தனியா நின்னு பாமக ஓட்டை முடிந்த அளவுக்குப் பிரிக்கறதுக்கான கூட்டுத்திட்டமா இருந்தாலும் இருக்கலாம்.
இப்போ ஆக்ரோஷத்தை பாரு. மாட்டி விடுவாராம்.
தமிழனுக்கு தெலுங்கர்கள் கூட்டணியில் என்ன வேலை.. தெலுங்கர் முன்னேற்ற கழகம் கூட்டணியில் இருப்பவர்களும் , மற்றும் தலைமையேற்கும் கட்சியின் தலைமை முதல் அதன் முன்னணி அமைச்சர்கள் முதல் மேயர்கள் வரை அனைவரும் தெலுங்கர்கள்.. இந்த தேர்தல் தமிழன் எடப்பாடி தலைமையில் தமிழகம் இருக்க வேண்டுமா இல்லை தெலுங்கர்களுக்கு அடிமையாக தமிழகத்தின் வளம் மற்றும் அரசு பணத்தை கொள்ளை கொடுக்க வேண்டுமா?
விஜயகாந்தின் நெடுநாளைய ரசிகர் நீர் ஏன் விஜயகாந்த் பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடக்கூடாது?
வாழ்வுரிமை கட்சினு பெயரை வைத்துக்கொண்டு வாழ்வில்லாமல் எதற்கு திமுக கூட்டணியென்று விலகி விட்டார்.
இவ்வவ்ளவு நல்லவர் ஸ்டாலின் பேசி கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும்
23கட்சியில் ஒரு கட்சி அவுட்...இதுமாதிரி கட்சிகளுக்கெல்லாம் ஓட்டுக்கள் இருக்கா!!!!!
தற்சமயம் குருமா 23 வதாக ஒரு பார்ட்டிய கூட்டணிக்குள் கொண்டு வந்தால் ஒரு சீட்டு கூட்டி தருகிறோம் என திமுக சொல்லியிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். சண்முகம் வெளிய போகாம பாத்துகிடடா ஒரு போனஸ் சீட் ஆகமொத்தம் 4+2 தொகுதிகலை வாஙகிக்கொள்ளும் சாய்சசை அவரிடமே கொடுத்து Now the ball is in your court என கூறிவிட்டதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.மேலும்
-
5 தொகுதிக்கு அலையும் திமுக கூட்டணிக் கட்சிகள்: இபிஎஸ் கிண்டல்
-
சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
-
கட்சி கொடியுடன் காரில் வலம்; புவனகரி தேர்தல் துறை கப்சிப்
-
கிரீன் பாரடைஸ் பள்ளி ஆண்டு விழா
-
திண்டிவனம் தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் சின்னம் வரைவதில் சுணக்கம்
-
குறைகேட்புக் கூட்டம் ரத்து :பெட்டியில் குவியும் மனுக்கள்