குறைகேட்புக் கூட்டம் ரத்து :பெட்டியில் குவியும் மனுக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் காரணமாக பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெட்டியில் மனுக்கள் பெறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி மாலை வெளியானது. என்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால், அரசு நலத்திட்டம், மனுக்கள் பெறும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏராளமான பொது மக்கள், விபரம் தெரியாமல், மனு அளிக்க வருகின்றனர். இதற்காக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், திங்கள் கிழமை மட்டும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மனுக்கள் பெற பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மனு அளிக்க வந்த ஏராளமான மக்கள், தாங்கள் கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போட்டுச்சென்றனர். இந்த மனுக்கள், அந்தந்த துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement