தொட்டியத்தில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
திருச்சி : முசிறி அருகே, நேற்று அதிகாலை வீசிய சூறைக்காற்றில், 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன.
திருச்சி மாவட்டம், தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள வரதராஜபுரம், சீனிவாசநல்லுார், கோடியம்பாளையம், அழகரை, சித்துார், ஏரிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று அதிகாலை, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில், 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, ஒரு லட்சம் வாழைத்தார்களுடன் கூடிய மரங்கள் முறிந்து, சேதமாகின. ஒருசில மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை; இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
Advertisement
Advertisement