போரின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மேற்காசிய போரின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: கோவிட் காலத்தில் தயாரானது போல், மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்; மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
போராட்டம்
நிலைமையின் தீவிரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் எல்பிஜிக்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்.
தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை.
அறிவுரை
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் மத்திய பாஜ அரசைக் கண்டித்துத் தமிழகம் எங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு தயராக மிக சிறப்பாக செயல் படுது .உங்களை போல சில தரம் தாழ்ந்த அரசியல் வியாபாரிகள் தான் திசை திருப்ப நினைக்கிறார்கள்.
மக்களாட்சி என்றால் என்ன என்று தெரியாத புரியாத திருட்டு மாடல் ஆட்சிக்கு வெட்கக்கேடாக இல்லையா இந்த ஒரு கேள்வியை கேட்பதற்கு எல்லாம் காலத்தின் கட்டாயம் ஆட்சியை கொடுத்துவிட்டோம் மீண்டும் கொடுக்காமல் இருப்பது நம் கையில்
திகாருக்கு ரெடியாகு
பத்து ரூவா விட்டு என்ன தெரியும்
என்ன தெரியும்
கையாலாகத முறையில் ஆட்சி செய்து பத்து லட்சத்து அறுபத்தி ஐய்யாயிரம் கோடி கடன் வாங்கி தமிழக மக்களை
திவால் நிலைக்கு கொண்டு வந்து வைத்திருக்கும் டெல்டாகாரன்னு சொல்லி புருடாவிடும் திருட்டு திமுகவுக்கு டெல்லியை பற்றி எப்பவுமே இனி கவலை வேண்டாம். ஏனெனில் அங்கு ஆள்பவர் உலகின் விஸ்வகுரு மானம்மிகுந்த மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திரமோதிஜீ அவர்கள்.
இவரை யாருப்பா தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது .. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது , இவரு தேசிய அரசியலுக்கு அச்சாரம் போடுறார்
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 1.47 பில்லியன் முதல் 1.48 பில்லியன் 147-148 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருந்தபோதிலும், கோவிட் பெருந்தொற்று முதல் தற்போதைய மேற்கு ஆசியப் போர் வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி NDA அரசாங்கத்தின் காரணமாக நமது பொருளாதாரம் இன்னும் சிறப்பாகவே உள்ளது. நமது பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் ஈரான் அரசாங்கத்துடன் பேசி, நமது கப்பல்கள் எந்தத் தடையுமின்றி இந்தியத் துறைமுகங்களுக்குச் செல்ல ஹோர்முஸ் வழித்தடங்களைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். உலகின் முக்கிய நாடுகள் எண்ணெயை விட எரிவாயு விஷயத்தில்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாதான் இதில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசாங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதால், இந்தியா ஈரான், ரஷ்யா மற்றும் சில பிற நாடுகளிலிருந்து மட்டுமே எரிவாயு மற்றும் எண்ணெயைப் பெற்று, தனது 80% தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதைத் தடுப்பதற்காக, நாடாளுமன்றத்தில் வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
As of early 2026, Indias population is estimated to be approximately 1.47 billion to 1.48 billion 147-148 crores. With this huge population, our economy still stands well because of the NDA Government from COVID to the present West Asian War. Our PM and Foreign Minister have spoken to the Iranian Government and asked them to the Hormuz passages to move our ships without any hurdles to Indian ports. It is worse for gas than for oil suffered by Major countries in the world. Europe was the main victim. In this situation, India is only getting gas and oil from Iran, Russia, and some other countries, and meeting our 80% requirement because of the NDA in the Central Government. Opposition Parties, including DMK, Congress, TMC, etc., are willingly creating problems in the Parliament to avoid the smooth running of the Parliament Budget session.
country people only, from looters