காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த ஆபரண தங்கம்
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்த நிலையில், மாலை 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,620 ரூபாய்க்கும், சவரன், 1,08,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று (மார்ச் 24) காலை தங்கம் விலை, கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து, 12,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 5,360 ரூபாய் சரிவடைந்து, 1,03,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 280 ரூபாய் குறைந்து, 12,670 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 2,240 ரூபாய் சரிவடைந்து, 1,01,360 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று மாலை திடீரென தங்கம் கிராமுக்கு, 670 ரூபாய் உயர்ந்து, 13,340 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 5,360 ரூபாய் அதிகரித்து, 1,06,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 15,000 ரூபாய் அதிகரித்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 2,240 ரூபாய் குறைந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு, 15,000 ரூபாய் அதிகரித்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 340 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இனறு மாலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 250 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது.
மொத்தத்தில் தங்கம் விலை நேற்றை காட்டிலும் 720 குறைந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆக விற்பனை ஆனது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நேற்று மூன்று முறையில் இரண்டு முறை அதிகரிக்க நிலையில் இன்று ஒருமுறை மட்டுமே குறைந்துள்ளது அது ஏன்மேலும்
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
-
திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு
-
அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு