புதுச்சேரியில் தனித்துப்போட்டி; கூட்டணியால் தேவையற்ற மன உளைச்சல் என்கிறார் திருமா
நமது நிருபர்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகள் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பல கட்ட பேச்சுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. அதில், வி.சி.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் அந்த கட்சியினருக்கு திருப்தி இல்லை. தற்போது 3 தொகுதிகளில் தங்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது.
இருந்த போதிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக'வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
@quote@
2 தொகுதி
புதுச்சேரியில் நெட்டப்பாக்கம், ஏனாம் ஆகிய 2 தொகுதியில் தேமுதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். quote
வாசகர் கருத்து (18)
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
24 மார்,2026 - 15:20 Report Abuse
முஸ்லீம் கிருத்துவம் இவைகளை தாங்கி பிடிப்பதும் ஹிந்து மதத்தை கேலி பேசி அவமதிப்பதும் தன் இவர்களின் மத சார்பின் ன்மை. மக்களே இவர்களை வெற்றிபெற செய்யாதீர்கள். அது நாட்டுக்கு செய்யும் சேவை 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
24 மார்,2026 - 13:16 Report Abuse
திருமா மற்றும் மகம்யூனிஸ்ட் தெளிவா இருக்கிறார்கள் மதவாத சக்திகள் இங்கு காலூன்ற விட கூடாது அதில் நாம் விட்டு கொடுத்தால் அப்புறம் தமிழ்நாடு வடநாடு போல ஆகிவிடும் என்று உணரன்து தான் இப்படி ஒத்துக்கொள்ளுகிறார்கள் 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 மார்,2026 - 14:20Report Abuse
கிருஸ்தவ இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் கைக்கூலி எல்லோருக்கும் தெரியாத விஷயம் தானே 0
0
kjpkh - ,இந்தியா
24 மார்,2026 - 14:27Report Abuse
ஆக மொத்தம் ஆட்சியை நம்பி அல்ல. பாஜக உள்ளே வந்து விடும் என்ற பயத்தை காட்டியதால் மோசமான ஆட்சி என்றாலும் பரவாயில்லை என்று விட்டு கொடுத்திருக்கிறார். பாஜகவினர் நன்றாகவே கதற விடுகிறார்கள். 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
24 மார்,2026 - 12:54 Report Abuse
மதச் சார்பற்ற கட்சி என்று நம்ப குருமா குறிப்பிடுவது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அல் உமா. இவர்கள் தான் நல்ல தமிழ்ப் பற்றுடன், தமிழில் பெயர் கொண்டு தேசப் பற்றுடன் நம் பாரத திரு நாட்டுக்கு மத உணர்வின்றி கடமை ஆற்றி வருபவர்கள். குருமாவிற்கு தேச உணர்வு அதிகம். 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24 மார்,2026 - 12:30 Report Abuse
கூட்டணியிலிருந்து கொண்டே குடைச்சலும் கொடுப்போம்.இவங்க கூட பெரிய ரோதனையா போச்சு. . பாம்புனும் தாண்ட முடியலே கயிறுனும் மிதிக்க முடியல. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 11:59 Report Abuse
இன்று இதுவரை எந்த பிற கட்சிகளுக்கும் அறிவுரை வழங்காமல் மௌனம் காப்பது மனதிற்கு வேதனையை அளிக்கிறது 0
0
Reply
A.Kennedy - Salem,இந்தியா
24 மார்,2026 - 11:47 Report Abuse
நல்ல முடிவு, அப்ப தமிழகத்திலும் இதே முடிவை எடுக்கலாமே? வாழ்த்துக்கள் 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
24 மார்,2026 - 12:24Report Abuse
அப்ப மோடி கிட்ட கேளுங்க காங்கிரஸ் ஐ தோற்கடிக்க என் 41 கட்சி கூட்டணி வெசார் என்று 0
0
Reply
kjpkh - ,இந்தியா
24 மார்,2026 - 11:45 Report Abuse
தேவையற்ற மன உளைச்சல்கள் எல்லாம் வரக்கூடாது. அப்புறம் பாஜக உள்ளே வந்துடும். ரொம்ப நல்லாத்தான் ஜோக் அடிக்கிறார் திருமா. 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
24 மார்,2026 - 11:43 Report Abuse
மத வாத ஜாதிய கட்சிகள் ஒழிக்கப்டபட வேண்டும். 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
24 மார்,2026 - 11:39 Report Abuse
Can he explain what is muslim Parties, are they secular???? 0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
24 மார்,2026 - 12:41Report Abuse
"Sambar rice, curd rice sweet pongal venpongal puliyogare" are non secular. "Quarter, Quska, Qabab" are " True secular"- Dravisha theology. 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
24 மார்,2026 - 11:38 Report Abuse
அதிமுக மற்றும் திமுக கூட்டங்களில் தலா இரண்டு தொகுதிகள் வாங்கிக் கொள்ளுங்கள் யாரும் கோவிச்சிக்கமாட்டாங்க. மற்ற தொகுதிகளில் 50:50 ஆதரவு என அள்ளிவிடுங்கள். 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement