குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர்; சுகாதார சீர்கேடால் கிராம மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள குறிஞ்சி நகர், அம்மன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் கடந்த, 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் அப் பகுதி குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்-தது. சாலையோரம் செல்லும் கால்வாய் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் பாப்பிரெட்டிப்-பட்டி பேரூராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த குடி-யிருப்பு பகுதியில் உள்ள கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் மண் திட்டுகளாலும், செடிகள் வளர்ந்துள்ளதாலும் கழிவுநீர் வெளியேற வழி-யின்றி குடியிருப்பு பகுதிக்குள் தேங்கியுள்ளது.

இதனால், கழிவுநீரில் புழுக்கள் கொசுக்கள் உற்-பத்தியாகி உள்ளதால், அப் பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவி வருகி-றது. எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கி-யுள்ள கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில், துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோன்று புதுப்பட்டி கிராமத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், தெருக்-களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில், புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்-பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement