ஓசூர் மாநகராட்சியில் நிரம்பி வழியும் கால்வாய்கள்; துார்வாராததால் துர்நாற்றத்தின் பிடியில் பொதுமக்கள்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிவதால், துர்நாற்றத்தின் பிடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் போதிய ஊழியர்கள் இல்லாததால், மாநகராட்சி-யிலுள்ள, 45 வார்டுகளில் சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்படாமல், கால்வாய்கள் நிரம்பி கடும் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பல இடங்களில் வீடுகள் முன் சாக்கடை கால்வாய்களை மூடி சிலாப் போட்டுள்ளனர். அதனால், கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள மாநகராட்சியால் முடிய-வில்லை.

கடந்த செப்., மாதம் தினமும், 2 முதல், 3 வார்டு-களில், மாநகராட்சி நிரந்தர துாய்மை பணியா-ளர்கள் தலா, 30 பேர் மற்றும் பொக்லைன், டிராக்டர் உள்ளிட்டவை உதவியுடன், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்-டது.
ஆனால், துார்வாரும் பணி சவாலாக இருப்பதாக கூறி, இத்திட்டம் கைவிடப்பட்டது. அதனால், தற்-போது மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் தற்போது நிரம்பி துர்-நாற்றம் வீசுகின்றன.

சாலையோரம் நிரம்பி வழியும் சாக்கடை கால்-வாய்கள் அருகே, தள்ளுவண்டிகளில் உணவு சமைத்து மக்களுக்கு வழங்குகின்றனர்.
இதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, ஓசூர் அண்ணாதுரை சிலை அருகே, பழைய பெங்களூரு சாலை, தாலுகா அலுவலக சாலை, ராஜகால்வாய்கள் என, பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
'கிரீன் சிட்டி, கிளீன் சிட்டி' என மாநகராட்சி கூறி-னாலும், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள கழிவு நீர், ஓசூர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்-துகிறது.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்-வாய்களை சுத்தம் செய்யும் பணியை கையில் எடுத்து, திறன்படி அனைத்து வார்டுகளில் சுத்தம் செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement