காரில் மது பாட்டில் கடத்தல்: பறக்கும் படையினர் பறிமுதல்

1

விக்கிரவாண்டி: புதுச்சேரியில் இருந்து காரில் கட்டத்திய மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

விக்கிரவாண்டி அடுத்த அழுக்கு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மூக்கம்மாள் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அகிலாண்டம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த காரை சோதனை செய்ததில் காரில் மது பாட்டில் கடத்தியது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னை ஹபியுல்லா ரோட்டைச் சேர்ந்த சங்கர், மாருதி எனவும், திருமண நிகழ்ச்சிக்காக மது பாட்டில் கடத்தியதும் தெரியவந்தது.

பறக்கும் படையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.

உதவி தேர்தல் அலுவலர் மகாதேவன் ,தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் சமூக நல தாசில்தார் வேல்முருகன், மண்டல துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் மது பாட்டில்களை மாவட்ட கலால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement