விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயின்டர் பலி
தலைவாசல்: தலைவாசல் அருகே பட்டுத்துறையை சேர்ந்தவர் ஹரீஷ், 25. பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த, 23ல், தலைவாசல் மேம்பாலம் வழியே பைக்கில், ஹெல்மெட் அணி-யாமல் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்-பட்டதில் மூளைச்சாவு அடைந்தார். சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
சமையல்காரர் சாவுஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி, தொட்டி பட்லாவை சேர்ந்-தவர் கடலி நரசய்யா, 68. இவர், சேலம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து சன்னியாசிகுண்டு செல்லும் பகுதியில் உள்ள தேங்காய் குடோன் அருகே, சமையல் வேலை செய்து வந்தார். நேற்று மாலை, 5:15 மணிக்கு, அங்குள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது வந்த, ஆர்.ஐ.யமஹா பைக் மோதியதில், சம்பவ இடத்திலேயே கடலி நரசய்யா பலியானார். பைக்கை ஓட்டி வந்த வலசையூரை சேர்ந்த ராகுல், 20, என்பவரும் காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.