தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அரசு பொது நுாலகம், 1961, மார்ச் 25ல், தொடங்கப்பட்டது. 65 ஆண்டு கடந்த இந்த நுால-கத்தில், 48,000 புத்தகங்கள், 130 புரவலர்கள், 6,900 உறுப்பி-னர்கள் உள்ளனர்.

தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து படித்து செல்கின்றனர்.நேற்று, 65 ஆண்டு நிறைவு பெற்றது. இதனால், 66ம் ஆண்டு தொடக்கவிழா, தம்மம்பட்டி மக்கள் குழு, நண்பர் குழு, ஊர்-மக்கள் சார்பில் நடந்தது. அப்போது நுாலகத்துக்கு புது நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன. தி.மு.க., பேரூர் பொறுப்பாளர் சண்-முகம், காங்., மாவட்ட துணைத்தலைவர் திருச்செல்வன், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தியா, கவுன்சிலர்கள், புரவ-லர்கள் பங்கேற்றனர்.

Advertisement