வசூலை அள்ளி குவிக்கும் துரந்தர் 2
நமது நிருபர்
ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' திரைப்படம், இந்தியாவில் 5 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததோடு, உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலையும் கடந்துள்ளது. ஹிந்தியில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் 2ம் பாகம், 'துரந்தர் தி ரிவெஞ்ச்' என்கிற பெயரில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) உலகமெங்கும் வெளியானது.
இந்த படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது 'படம் எப்படி இருக்கிறது?' என நிருபர்கள் கேட்டதற்கு 'படம் சூப்பராக இருக்கிறது' என சைகை செய்துவிட்டு ரஜினி சென்றார்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
முதல் பாகமான 'துரந்தர்' பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலக விஷயங்களை மேலோட்டமாக பேசியது; அதே இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' பல விஷயங்களை நிகழ்கால சம்பவங்களுடன் ஒன்றிணைத்து நேரிடையாக பலவற்றை சிந்திக்க வைக்கிறது. இதுதான் படம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சாதனை
கடந்த வியாழக்கிழமை வெளியானபோது 102.55 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தியில் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இறுதிப் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், ஆதித்யா தார் இயக்கிய இந்த படம் நேற்று (மார்ச் 23) ரூ. 65 கோடி நிகர வசூலை பதிவு செய்துள்ளது என சாக்னில்க் என்ற வர்த்தக இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இப்படத்தின் ஐந்து நாள் நிகர வசூல் தற்போது ரூ. 519.12 கோடியாக உள்ளது. அதே சமயம், உலகளவில் இது ஏற்கனவே ரூ. 800 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டிவிட்டது.
துரந்தர் 2 படத்திற்கு 5 நாட்களுக்கு கிடைத்த வசூல்
* வியாழக்கிழமை (மார்ச் 19): ரூ 102.55 கோடி
* வெள்ளிக்கிழமை (மார்ச் 20): ரூ 80.72 கோடி
* சனிக்கிழமை (மார்ச் 21): ரூ. 113 கோடி
* ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22): ரூ. 114.85 கோடி
* திங்கட்கிழமை (மார்ச் 23): ரூ 65 கோடி
* மொத்தம்: ரூ 519.12 கோடி
இதே வேகத்தில் சென்றால், 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் 1,000 கோடி ரூபாய் வசூலித்துவிடும். இப்படம் ஏற்கனவே இந்தி சினிமாவுக்கு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
படத்தில் பாகிஸ்தானின் குற்றவியல்-பயங்கரவாத வலையமைப்புகளில் ஊடுருவும் ஒரு இந்திய உளவாளியாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன், மற்றும் கவுரவ் கேரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குநர் ஆதித்ய தர், ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ள அஸ்வத்தாமா திரைப்படத்திலும் ரன்வீர் சிங்கையே நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் முழுவதும் வன்முறைதான் மொக்கையான படம்
முஸ்லிம்களின் மீது வன்மத்தை கக்குறதுதான் உங்களுடைய தேசபக்தியா ?
தேச விரோதிகள் மீது வன்மத்தை கக்குவது சரியா இல்லையா? பாய் நீங்க தேச விரோதி இல்லேன்னா, நீங்களும் கூட்டத்தில கலந்துக்கிட்டு தேசவிரோதிகளுக்கு எதிர குரல்குடுங்க. தேசவிரோதிகளை பத்தி பேசினாலே முஸ்லீமை முன்னால கொண்டுவந்து ஏன் சம்பந்தப்படுத்தறீங்க? அவுங்களுக்கும் தேசவிரோதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
உண்மையை சொன்னால் ஏன் கோவம் வருகிறது. டதேச பற்றை விட மத பற்று தன் இருக்கிறது. பேசாமல் பாகிஸ்தானில் குடி உரிமை வாங்கி அங்கு selavum
What do you mean? I have a lot of muslim friends who love this movie a lot, because this film is an eye opener for a lot of hindutva sanghis who think all muslims are terrorists, instead it shows good and bad is everywhere
கஷ்மீரில் 5 இலட்சம் ஹிந்துக்களை.விரட்டி கற்பழித்து கொலை செய்து விரட்டிய போது மொத்த இந்திய முஸ்லீம்களும் மௌனமாக இருந்தனர்.
be indian - supporting his own religion nothing else. paining him. truth hurting him
இந்த சங்கீகளின் மனநிலை என்னவென்றால் இந்தியாவில் முஸ்லிம்களை ஏதாவது ஒரு வழியில் கார்னர் பண்னிக்கொண்டிருக்கவேண்டும், அதற்கு பாக்கிஸ்தான், கேட்டால் தேச ஒற்றுமை என்று சொல்வது, இதை கெட்டியாக பிடித்துக்கொண்டு கதையே இல்லாமல் படம் எடுத்தாலும் பிச்சுக்கிட்டு ஓடும் இதைத்தான் வடநாட்டு இயக்குனர்கள் கையாண்ட யுக்தி இது
ரியாலிட்டி ஹர்ட்ஸ்.
குடிசைகளை கண்டா உங்களுக்கு ஏன் ஆத்திரம்.. பல கோடிஸ்வரனுங்க புள்ளை வேண்டி கடவுளிடமும் ஆஸ்பத்திரி வாசலிலும் .. எடுத்துகிட்டு இருக்காங்க..
ஒரு பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் மக்களுக்கு பிடிச்சா அது தானா ஒடப் போகுது. படத்த படமா மட்டும் பாருங்க சார்.. தியெட்டர விட்டு வெளிய வந்தும் அத பத்தி இங்க பேசி சண்ட போடுறது சுத்த வேஸ்ட்..
நம் இளைஞர்களுக்கு தேசப்பற்றை உண்டாக்கும் படம் இது. இந்த சினிமா குழுவினருக்கு பாராட்டுகள். தேச விரோத அரசியல் வியாதிகள் இந்த படத்தை எதிர்க்கத்தானே செய்யும்.
நீங்கள் வாழும் நாட்டை நேசியுங்கள் என்று எவ்வளவு கெஞ்ச வேண்டியிருக்கு, ஆனாலும் துரோகிகள், அயலக மக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டை பூச்சிகள் போல, ஆஹா அட்டைப்பூச்சிகளும் கருப்பு, இவர்களின் மனமும் கருப்பு
நான் எந்த படமும் பல ஆண்டுகளாய் பார்ப்பதில்லை. என் வருத்தம் சினிமாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என்பதே. இப்படத்தின் வெற்றியில் கிடைக்கும் செல்வத்தில் ஓரு சிறிய பங்காவது ஏழை மக்களை உயர்த்த போனால் நல்லது என்பதே. அதன் விளைவே அந்த பதிவு.
ஏன் நிதி குடும்பம் ஒரு வேலையும் செய்யாம நாட்டை சுரண்டி கோடிகோடியா குவிச்சு வச்சிருக்கே அங்க போய் பிச்சை எடுக்க வேண்டியது தான.
சரி சார் உங்க சம்பளத்தில் இருந்து மாதா மாதம் நீங்க என்ன உதவறிங்க.. சொல்லுங்க..
படமே பார்க்காதவர்களுக்கு ஏன் இந்த கவலை. நடந்த உண்மைகளை மிக அழகாக ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் அது ஏகபோக மக்களின் பெரும் ஆதரவை பெற்றுவிட்டு பாக்ஸ் ஆபிஸில் பின்னி பெடலெடுக்குது அது உங்களை போன்ற ஆட்களுக்கு பொறுப்பதில்லை. சமீபத்தில் வெளிவந்து ஊத்தி மூடிய பராசக்தி ஒருவேளை ஓடியிருந்தால் நீங்க கொண்டாடி இருப்பீங்க
ரொம்ப சந்தோஷம் படம் பார்க்காத உங்களுக்கு எந்த படம் ஓடினா என்ன ஓடாட்டி கவலை என்ன?. இப்படி பேசியே யாரும் யோகியம் இல்லை என்று தேர்தலில் ஒட்டு போடாம இருந்திராதீங்க. நாம யோகியம் என்றால் இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை பார்த்து தேர்தேடுகும் கடமை இருக்கு
நவோதய பள்ளிகளில் கட்டணமில்லாமல் ஏழைகளுக்கு உயர்தர கல்வி வழங்க படுகிறது. அதுவே தனியார் நடத்தும் பள்ளிகளில் Rs 10 லக்ஷம் முதல் Rs 20 லக்ஷம் வரையில் வசூலிக்கிறார்கள். அப்படி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தனியார் நடத்தும் பள்ளிகளில் அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி என்பதை உங்களால் அறிவிக்க முடியுமா ?
புஷ்பா மாதிரி படங்களில் என்ன இருக்குதுன்னு அப்படி 1000 கோடி ரொவாய்க்கும் மேல் வசூல் பண்ணிச்சு? அதுவும் புஷ்பா 2 படத்தில் அந்த ஒரு மோசமான டான்ஸ் உள்ள பாட்டுக்கு மட்டுமே படம் வசூல் பண்ணியது என்று சொன்னார்கள். இப்போல்லாம், ஒரு குத்து பாட்டு அதுவும் ஹீரோ, ஹீரோயின் கண்டமேனிக்கு டான்ஸ் மூவ்மெண்ட் ஆடி ஹிட் ஆனாலே படம் சில நூறு கோடிகள் வசூலிக்கும் என்று முக்கியமாக தெலுங்கு படவுலகில் நம்புகிறார்கள். மூளையை அடமானத்துக்கு வச்சுட்டு 500, 1000 ரொவாய்ன்னு காசு கொடுத்து படம் பார்த்தால் ஹீரோக்கள் கோடிகளில் புரளுவார்கள். காஷ்மீர் பைல்ஸ், துரந்தர் மாதிரியான படங்களுக்கு ஆதரவளித்தால், படம் நன்றாக ஓடுவதோடு, பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும், துரோகிகள் யார் என்று புரியும். ஜெய் ஹிந்த்
நல்லகாலம் முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. முக்கியமாக இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் முதலிய மூன்று மாநிலங்களில் தேர்தல் என்பதால் தமிழகத்தில் திராவிடத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் மட்டும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது பாகிஸ்தானுக்கு எதிராக உள்ள படம். இதில் குரல் கொடுப்பவர்கள், மதச்சாயம் பூசுபவர்கள் மக்களிடம் வெளிப்படையாக தெரிவார்கள். மக்களும் அவர்களை நன்கு புரிந்து கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தானில் அனுமான் சாலிசா பாடுவதாக காட்ட முடியும் ?மேலும்
-
செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை